Sunday, December 3, 2017

பாடுவோம்,  மாற்றுவோம்: Writing songs for change! Day 8


We got together with the girls from Snehidhi, a CWDR project, and they wrote songs about gender equality and change through the morning. In the afternoon, Vedanth Bharadwaj came over and helped them fine-tune the lyrics and 'find the tune' for the songs. This will be an unforgettable experience for the girls!

Here are the two songs that came from that afternoon.

(1)

உலகில் அனைவரும் ஒன்று 
அதை அறிந்து வாழ்வது நன்று 
சமத்துவம் சமத்துவம் என்று
நாம் போற்றி பாடுவோம் இன்று..

உடலும் உயிரும் போல 
ஒன்றாய் வாழ வேண்டும் 
நிலவும் தோற்றம் போல 
மாற்றம் தோன்ற வேண்டும்.

உலகில் அனைவரும் ஒன்று 
அதை அறிந்து வாழ்வது நன்று 
சமத்துவம் சமத்துவம் என்று
நாம் போற்றி பாடுவோம் இன்று.

சொல்லும் பொருளும் போல 
ஒற்றுமை உணர்வு வேண்டும் 
மரமும் வேரும் போல 
சமமாய் வாழ வேண்டும்.

உலகில் அனைவரும் ஒன்று 
அதை அறிந்து வாழ்வது நன்று 
சமத்துவம் சமத்துவம் என்று
நாம் போற்றி பாடுவோம் இன்று 

நாம் போற்றி பாடுவோம் இன்று 
நாம் போற்றி பாடுவோம் இன்று........

Written by  G. Poonguzhali, Sharmila, Karthi, J. Nandhini, S. Soundharya, S. Divya

Listen to the girls sing: https://soundcloud.com/grit-prajnya/a-song-of-equality-i

(2) 

வன்முறை, வன்முறை என்ற  கொடுமை 
தலைமுறை, தலைமுறையாக வறுமை 
பெண்களுக்கு இருக்கு வன்கொடுமை 
பெண்ணுக்கு வேண்டும் தன்னுரிமை 

வன்முறை ஒழிக்க போராட்டம் 
பெண் விடுதலை காக்க போராட்டம் 
ஆயுதம் ஏந்தாத  போராட்டம் 
வெற்றியை அளித்த போராட்டம் 

வன்முறை, வன்முறை என்ற கொடுமை 
தலைமுறை, தலைமுறையாக வறுமை 
பெண்களுக்கு இருக்கு வன்கொடுமை 
பெண்ணுக்கு வேண்டும் தன்னுரிமை 

உழைக்கும் பெண்களின் கோபம் 
அதுவே வலியின் சாபம் 
வன்முறையால் பெண்களுக்கே துன்பம் 
போராட்டத்தால் கிட்டுமே இன்பம் 

வன்முறை வேண்டாம், அமைதி வேண்டும் 
அழிவு வேண்டாம், மாற்றம் வேண்டும் (3 முறை )

Written by  S. Nivedha, S. Devi Sri, G. Sangavi, V. Archana, S. Sneha, M. Bhavani, N. Geetha, S. Vindhya



No comments:

Post a Comment